நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் மாதம் 14 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டடுள்ளது. ரிசர்வ் வங்கியின் காலாண்டர் வாயிலாக விடுமுறைகள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளது.
அதன்படி, வங்கி கணக்கு முடிக்கும் நாளான 1ஆம் தேதி வங்கிகள் செயல்படாது. புனித வெள்ளியை முன்னிட்டு 2ஆம் தேதி இயங்காது. மேலும், 5ஆம் தேதி முன்னாள் துணை பிரதமரான பாபு ஜகஜீவன் ராம் பிறந்த நாளை முன்னிட்டு, ஐதரபாத்தில் வங்கிகளுக்கு விடுமுறை நாள். 13ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு, உகாதி பண்டிகை உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு வங்கிகள் இயங்காது.
14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி, விஷூ, பிஜூ உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாப்படும். 15ஆம் தேதி ஹிமாச்சல் மாநிலம் தினம், வங்க புத்தாண்டு உள்ளிட்டவை கொண்டாடப்படும் எனவே அன்றும் வங்கிகள் இயங்காது.
அசாமின் கவுஹாத்தியில், ‘போஹக் பிஹு’ பண்டிகையை முன்னிட்டு 16ஆம் தேதி; ராம நவமி விழா கொண்டாடப்படும் 21ஆம் தேதியும் வங்கிகல் செயல்படாது. இதை தவிர . இரண்டு சனிக்கிழமைகள் மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்து அடுத்த மாதம் மொத்தமாக 14 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த வங்கி விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது அல்ல. மாநிலம் மற்றும் பிராந்தியத்திற்கு ஏற்ப விடுமுறைகள் மாறுபடும்.