Published on 06/03/2022 | Edited on 06/03/2022
சாம்சங, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்தியுள்ளனர்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமைத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அதனை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என சாம்சங் நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனமும் விற்பனை மற்றும் சேவையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், உக்ரைனில் இணையதள பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஆப்பிள், சோனி, கூகுள், யூனிவர்செல், இன்டெல், பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தியுள்ளனர்.