Published on 12/09/2022 | Edited on 12/09/2022
![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/7UNTa6L62yo_aeXVNlS5uN-tTYYrOwJdtXw9ut5Vb0w/1662994381/sites/default/files/inline-images/n1055.jpg)
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்தி நடிகர் பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய நோட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல பஞ்சாபி பாடகர் சித்தும் மூசே வாலா கொலை வழக்கில் கபில் பண்டிட் என்பவர் உள்ளிட்ட 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கும்பலில் முக்கிய நபரான கபில் பண்டிட் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாதா லாரன்ஸ் உத்தரவின் பெயரில் சல்மான்கானை கொலை செய்யும் நோக்கில் மும்பையில் அவர் செல்கின்ற பகுதியில் நோட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.