Published on 09/11/2019 | Edited on 09/11/2019
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐவர் குழுவால் வழங்கப்படுகிறது.
இதன்பொருட்டு உ.பி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்நோக்கி இந்தியாவே பரபரப்பாக உள்ளது. நேற்று இரவு பிரதமர் மக்களுக்கு தீர்ப்பின் முடிவு யாருக்காக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு நல்லிணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பக்வாத் அயோத்தி தீர்ப்பு வெளியான பின்பு இன்று மதியம் ஒரு மணிக்கு ஊடகங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.