Published on 30/03/2020 | Edited on 30/03/2020
கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தங்களால் முடிந்த நிதியை தருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தற்பொழுது கரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி நிதி உதவி கொடுத்துள்ளார். அதேபோல் மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும், அதிகரிக்கும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்கச் சுவாச கருவிகள் வாங்கவும் டாடா குழும அறக்கட்டளை 500 கோடி ரூபாய் வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.