Published on 21/10/2020 | Edited on 21/10/2020

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக தளர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தற்போது வெங்காய தட்டுப்பாடு நிலவுவதால் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும், கையிருப்பு வெங்காயம் கூடுதலாக விடுவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ள மத்திய அரசு இதற்காக வெங்காய இறக்குமதி செய்வதற்கான சில கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.