Skip to main content

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்கங்களை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தலைமை கணக்கு தணிக்கையர் அலுவலக அறிக்கையில் அம்பலமானது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. நிலக்கரி சுரங்க ஊழலில் தொடர்புடைய பல்வேறு தரப்பினர் மீது டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் அவ்வவ்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் விசாரணையை துரிதப்படுத்த கேட்டுக் கொண்டு வந்துள்ளோம். ஆனால் விசாரணை இன்னும் முடியவில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

சார்ந்த செய்திகள்