போதிய ஆதாரம் இல்லாததால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இது பற்றி கேட்ட போது தலைமை நீதிபதி வீட்டில் வேலை பார்த்த ஒரு பெண்மணிதான், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். பரபரப்பான இந்த வழக்கை உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பாப்டே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுதான் விசாரிச்சிது.
இந்த அமர்வு முன் ஆஜராகி கோகாயும் விளக்கம் அளிச்சார். இந்த நிலையில் இந்த பாப்டே குழுவை உச்சநீதிமன்ற நீதிபதிகளான பாலி நாரி மனும், சந்திரசூட்டும் சந்திச்சி பாரபட்ச மின்றி விசாரிக்கணும்ன்னு கோரிக்கை வச்சதா ஆங்கில ஊடகங்கள்ல செய்தி பரவ, உச்சநீதி மன்றத் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. புகார் சொன்ன பெண் மணியோ, வாக்குமூலம் கொடுக்கும் போது தன்னோடு ஒரு வழக்கறிஞரையும் அனுமதிக்கணும்னு கேட்க, அனுமதி கிடைக்காததால, ஆஜராக மறுத்திட்டாரு. இப்படிப்பட்ட சூழல்லதான் அந்தப் பெண்மணி யின் மனுவை உச்சநீதிமன்றம் 6-ந் தேதி தள்ளுபடி பண்ணியிருக்கு.
பரபரப்பான வழக்கு ஒருவழியா முடிவுக்கு வந்திருந்தாலும், பணியிடங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களை விசாரிக்க, விசாகா கமிட்டிகளை அமைக்கணும்ங்கிற நடைமுறையை நீதித்துறையிலும் பின்பற்றி, இத்தகைய குற்றச்சாட்டுகள் வராமலும், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை காக்கப்படணும்னும் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறி வருகிறார்கள்.