Published on 23/08/2018 | Edited on 23/08/2018
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/Dv52yMLYdJJVDeAC1v8VH0kA8k1rT6ycO8OniuSayxM/1535042642/sites/default/files/inline-images/Kerala-flood1.jpg)
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் குறித்து உச்சநீதி மன்றத்தில் கேரளா சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரால் வெள்ளம் ஏற்பட்டது. இடுக்கி்யில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று கேரளா கூறியுள்ளது.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/f3Uf-N5IA0F6re_vnUmObY4ij5lh-_BxLNmN-NOzKwU/1535042672/sites/default/files/inline-images/kerala-flood_0.jpg)
இதையடுத்து , முல்லப்பெரியாறு அணை நீர் மட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை செயலர் தமிழகம், கேரளா பொதுப்பணித்துறை செயலர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.