Skip to main content

உ.பி தேர்தல்;"குஜராத்தில் இருந்துதான் உண்மையான ஆச்சரியம் வரப்போகிறது" - அகிலேஷ் யாதவ்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

akhilesh yadav

 

உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், மார்ச் 7 ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுத்ரியுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேச தேர்தலில் எந்த ஆச்சரியமும் நிகழாது என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; பாஜக ஏற்கனவே தோற்றுவிட்டது. மகாத்மா காந்தியின் கொலையாளிகளை கவுரவிப்பவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள். உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

 

"உத்தரப்பிரதேச மக்கள் தங்களது தீர்ப்புகளை வழங்கிவிட்டனர். இந்த தேர்தல் முடிவுகளில் எந்த ஆச்சரியமும் நிகழாது. விவசாயிகளும், இளம் வியாபாரிகளும், அனைத்து தரப்பு மக்களும் சமாஜ்வாடி கூட்டணியில் உள்ளவர்கள் ஆட்சி அமைப்பார்கள் என முடிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்திற்குப் பிறகு தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் இருந்துதான் உண்மையான ஆச்சரியம் வரப்போகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்