Skip to main content

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது...

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

rbi

 

பிப்ரவரி மாதம் 7-ம் தேதி நடந்த ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் பணவீக்கம் தற்போது இருக்கும் 4 சதவீதம் என்ற நிலையில் கட்டுக்குள் இருந்தால் ரிசர்வ் வங்கி, அடுத்த நிதியாண்டில் வட்டி விகிதத்தை 75-100 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கும் என எதிர்பார்க்கலாம் என யுபிஎஸ் தரகு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  மேலும் பணவீக்கம் தற்போது உள்ள 4% என்ற நிலையே தொடர்ந்தால், 2019-2020 நிதியாண்டில் சராசரியாக பணவீக்கம் 3.8% என இருக்குமெனவும் அப்படி தொடர்ந்தால் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 75-100 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்க வாய்ப்பு உள்ளது எனவும் யுபிஎஸ் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்