Skip to main content

ஆகஸ்ட் மாதம் முதல் குடியரசு மாளிகையை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

rashtrapati bhavan

 

இந்தியாவில் ஆவலுடன் பார்த்து ரசிக்கும் இடங்களில் ஒன்று இந்திய குடியரசு தலைவரின் மாளிகை. இந்த மாளிகை வளாகத்தில் அருங்காட்சியகம், மொகல் தோட்டம் என மக்கள் பார்த்து ரசிக்க அம்சங்கள் உள்ளன. இந்தநிலையில் கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல், குடியரசு தலைவர் மாளிகையை சுற்றிப்பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

அதன்பிறகு கரோனா பரவல் குறைந்த பிறகு குடியரசு தலைவர் மாளிகையை சுற்றிப்பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் கரோனா இரண்டாவது அலையின்போது மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், குடியரசு தலைவர் மாளிகையும், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தையும் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்