மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் கமர்ஹாட்டியில் உள்ள குடியிருப்பில், ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் பயின்று வரும் ஐவி பிரசாத் என்ற மாணவி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவியின் தாயார், மகளுக்கு போன் செய்துள்ளார். மாணவி பதிலளிக்காததால், சந்தேகமடைந்த தாயார் அறைக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து, இயற்கைக்கு மாறாக மகள் மரணமடைந்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.