Skip to main content

அயோத்தியில் தான் ராமர் கோவில் அமையும்: யோகி ஆதித்யநாத்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018


அயோத்தி ராமரது ஆசீர்வாதத்தை பெற்றுள்ளதால் இங்கு தான் ராமர் கோவில் அமையும். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற விவகாரத்தில் இன்னும் இறுதி தீர்வு ஏற்படவில்லை. இது தொடர்பான வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் நிலுவையில் இருந்து வருகின்றன.

 

 

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்று ராமர் ஜென்ம பூமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில், ராமர் இந்த உலகத்திற்கே கடவுள் போன்றவர். அயோத்தி ராமரது ஆசீர்வாதத்தை பெற்றுள்ளதால் இங்கு தான் ராமர் கோவில் அமையும். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ஒரு புறம் சில மூத்த தலைவர்கள் உச்சநீதிமன்றம் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராமர் கோவில் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜக அரசு அயோத்தி பிரச்சினையில் எதுவும் செய்யவில்லை எனக் கூறுகின்றனர். பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி செல்லும் போது இவர்கள் சதி செய்ய நினைக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'ராமர் கோவில் கட்ட அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது'-கே.எஸ்.அழகிரி கேள்வி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
nn

ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது என முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரொம்ப கொச்சையான கேள்விதான். கோயில் கட்டினால் ஆட்சிக்கு வந்திட முடியுமா? ஒரு கோவிலை கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விட முடியும் என எந்த முட்டாள் நினைப்பான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனக்குத் தெரிந்து எங்கள் கிராமங்களில் கும்பாபிஷேகம் செய்தவர்கள் எல்லாம் அடுத்த பஞ்சாயத்து போர்டு எலக்சனில் தோற்று இருக்கிறார்கள். காரணம் மக்கள் அதற்காக வாக்களிப்பது இல்லை.

அது வேறு இது வேறு. இன்றைக்கு அயோத்தியில் நடைபெற்று இருக்கின்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்திய அரசாங்கத்தினுடைய பணமோ, உபி அரசாங்கத்தினுடைய பணத்தையோ நீங்கள் தண்ணியாக செலவிடுகிறீர்களே. அது எப்படி நியாயமாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி அதைச் செய்ய முடியும்? எந்த நியாயம் எந்த சட்டம் அதை அனுமதிக்கிறது. நீங்கள் ரயிலை எல்லாம் இலவசமாக அனுப்புகிறீர்கள். எப்படி அது சாத்தியம். யார் அதற்கு பணம் கட்டியது? இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. அதற்கு கணக்கு காட்ட முடியுமா? ராமருக்கான புகழைக் கெடுத்து விடாதீர்கள் இதைத்தான் நான் பாஜகவிற்கு, ஆர்எஸ்எஸ்க்கும் சொல்லிக் கொள்வது. அவர் அப்பழுக்கற்றவராக இருந்தார். ஆனால் அவருடைய பெயரை பாழ்படுத்துகிறீர்கள் நீங்கள். அது தவறு என்பதை நாம் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டும். அச்சப்படக்கூடாது'' என்றார்.

Next Story

போஸ்டர் எரிப்பு - மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
pune ftii  campus beaten by right wing parties regards ramar issue

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் கடந்த் 22ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 23ஆம் தேதி, புனே திரைப்படக் கல்லூரியில் ‘பாபர் மசூதி இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது’ என்ற வாசகம் அடங்கிய பேனர், மாணவர்கள் வைத்திருந்தனர். அப்போது, வலது சாரி அமைப்பை சார்ந்தவர்கள், பாதுகாவலரை தாக்கி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து பேனரை கிழித்து மாணவர்களை தாக்கினர். மேலும் ‘ஜெய் ஸ்ரீராம்...’ என முழக்கமிட்டபடி பேனரை தீயிட்டு எரித்தனர். 

இத்தகவல் அறிந்த புனே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்பட்டது. பின்பு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, டெக்கான் காவல் நிலையத்தில் வலது சாரி அமைப்பைச் சார்ந்த ஒருவராலும், நிர்வாகத்தின் சார்பாக கல்லூரியின் பாதுகாவலராலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டு வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.