ராம் ஜெத்மலானியின் 94 வது பிறந்த நாள் - வைகோ வாழ்த்து தெரிவித்தார்
பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியின் 94 வது பிறந்த நாள் நாளை வருகிறது.
இதையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மும்பை சென்று ராம்ஜெத்மலானியை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது வைகோவிடம் பேசிய ராம்ஜெத்மலானி இந்தியா முழுதும் பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய வைகோ நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன் என்று தெரிவித்தார். விரைவில் சென்னையில் மாநாடு நடத்துவதாக தெரிவித்தார்.