![P CHIDAMBARAM](http://image.nakkheeran.in/cdn/farfuture/KrTYYTtDsIP5CymALoCCxiwpZwudpyhrOfezO7RmqpY/1625657676/sites/default/files/inline-images/a%20%2826%29_3.jpg)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (07.07.2021) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்கு இந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். இதனையொட்டி, ஏற்கனவே பதவிவகித்து வந்த பல்வேறு மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆகியோரின் ராஜினாமா, தொற்றுநோயைக் கையாளுவதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், "இந்த ராஜினாமாக்களில் அமைச்சர்களுக்கான பாடம் ஒன்று உள்ளது. விஷயங்கள் சரியாக நடந்தால் அதற்கான பெயர் பிரதமருக்கு செல்லும். விஷயங்கள் தவறாக நடந்தால் அமைச்சர் பலிகடா ஆவார். முழுமையாகக் கீழ்ப்படிந்ததற்கும், கேள்விகேட்காமல் அடிபணிந்ததற்கும் ஒரு அமைச்சர் செலுத்திய விலைதான் அது" எனக் கூறியுள்ளார்.