கடந்த மூன்றாண்டுகளில் கேன்சல் செய்த டிக்கெட் மூலம் ரயில்வே துறை 9000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தானை சேர்ந்து சிஜித் என்பர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் இவ்வாறு பதிலளித்துள்ளது. அதன்படி கடந்த மூன்றாண்டுகளில் அதாவது, 2017 முதல் 2020ம் ஆண்டு வரையில் முன்பதிவு செய்து அதன் பிறகு டிக்கெட்டை கேன்சல் செய்தவர்களிடம் இருந்து, 4684 கோடி ரூபாய் வருவாயாக வந்ததாகவும், காத்திருப்போர் பட்டியிலில் இருந்து டிக்கெட்டை கேன்சல் செய்யாதவர்களிடம் இருந்து 4335 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாகவும் அதில் ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த டிக்கெட்கள் மூலம் கிடைத்த வருவாய் பெரும்பாலும் ஏசி மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவர்களிடம் பெறப்பட்டவையாக இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். டிக்கெட்டை கேன்சல் செய்தவர்களிடம் இருந்து இவ்வளவு வருவாய் ரயில்வேக்கு வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.