Published on 20/11/2021 | Edited on 20/11/2021
இந்தியாவில் கரோனா பரவல் காரணமாக ரயிலில், சமைத்த உணவுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. சாப்பிட தயாராக இருக்கும் (ready to eat) உணவு வகைகள் மட்டுமே பயணிகளுக்கு வழங்கப்பட்டுவந்தன.
இந்தநிலையில் இரயில்வே வாரியம், இரயில் போக்குவரத்தை மீண்டும் இயல்புநிலைக்கு மாற்றவும், நாடு முழுவதுமுள்ள உணவகங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைக் கருத்தில் கொண்டும் மீண்டும் இரயில்களில் பயணிகளுக்கு சமைத்த உணவினை வழங்க முடிவு செய்துள்ளது.
தனது இந்த முடிவினை இரயில்வே வாரியம், இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் ரயில்களில் பயணிகளுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுவது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.