இந்தியாவின் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் கௌஷிக் பாசு. உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனராகவும் பணியாற்றினார். தற்போது கார்னெல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவர் தனது பக்கத்தில் ஆசிய நாடுகளின் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் குறித்த தகவல் ஒன்றினை பதிவிட்டார்.
Latest data on health & economy, Asia. May 21.
— Kaushik Basu (@kaushikcbasu) May 22, 2021
It's baffling to find India at the virtual bottom of the chart, given that it's one of the world's biggest vaccine producers & till 6 years ago it was one of the world's fastest growing economies. pic.twitter.com/ViGC4Tn5t9
அந்த தகவலின்படி, 2020 ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி -8.0 இருக்கிறது. ஆசிய நாடுகளில் கடந்த வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மோசமான சரிவை சந்தித்த இரண்டாவது நாடாக உள்ளது. மேலும் மே 21, 2021 வரை இந்தியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 212 பேர் இறந்துள்ளனர். ஆசிய நாடுகளிலேயே இது மோசமான இறப்பு சதவீதமாக பதிவாகியுள்ளது. இத்தகவல்களை ஒரு பட்டியலாக வெளியிட்டுள்ள கௌஷிக் பாசு, "உலகத்தின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும், ஆறு வருடங்கள் முன்புவரை வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரங்களில் ஒன்றாகவும் இருந்த இந்தியா, பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை புரிந்துகொள்ள கடினமாக உள்ளது" என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கௌஷிக் பாசு வெளியிட்ட தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "தடுப்பூசிகள் இல்லை. குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதிக கரோனா மரணங்கள். அரசாங்கத்தின் பதிலென்ன? பிரதமர் அழுகை" எனகூறியுள்ளார். நேற்று வாரணாசியில் உள்ள மருத்தவ பணியாளர்களோடு பேசிய பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டார். அதை குறிப்பிட்டு ராகுல் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.