அம்பானி குடும்பத்திலிருந்து வெளியாகும் ஜியோ நெட் ஒர்க் விளம்பரங்ளில் பிரதமரை பயன்படுத்தியபோதே பெரிய சர்ச்சை கிளம்பியிருந்தது.
மொபைல் சேவையை 1 வருடத்திற்கு இலவசமாக பொதுமக்களுக்கு கொடுத்து பயன்படுத்தவைத்து கோடிக்கணக்கில் சந்தாதாரர்கள் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் விலை நிர்ணயம் செய்து, தற்போது முதல் இடத்தை பிடித்தது ஜியோ. தற்போது மத்திய அரசாங்கத்தின் செல்வாக்கை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு நிறுவனங்களின் உள்ளேயே தன்னுடைய ஆதிக்கத்தை ஜியோசெலுத்தி வரும் நிலையில் தற்போது மத்திய அரசின் பெரிய துறையான இரயில்வேயிலும் நுழைந்துள்ளது.
ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு ஒரு மாதத்துக்கு 60 ஜிபி டேட்டா 125 ரூபாய்க்கும், இணை செயலாளர் பிரிவு அதிகாரிகளுக்கு ஒரு மாதத்துக்கு 45 ஜிபி டேட்டா 99 ரூபாய்க்கும், குரூப் C ஊழியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 30 ஜிபி டேட்டா வெறும் 67 ரூபாயிலும் வழங்கிறோம் என்று சொல்லி உள்ளே நுழைந்திருக்கிறது.
இதற்கு முன்பு 1.95 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே சேவை அளித்தது ஏர்டெல் நிறுவனம். ஆனால் ஜியோ தற்போது வழங்கியுள்ள அதிரடி சலுகையினால் 3.78 லட்சம் ஊழியர்களுக்குள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.