Published on 28/09/2018 | Edited on 28/09/2018

மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள ராகுல் காந்தி, சித்ரகூட்டில் ஊள்ள புகழ்பெற்ற ராமர் கோவில் ஒன்றிற்கு சென்று வழிபட்டார். அதன் பின்னர் ராகுல் காந்தி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், “ பிரதமர் மோடியின் அரசு பணமதிப்பு மற்றும் ஜிஎஸ்டி என்ற திட்டங்களை கொண்டு வந்து சிறு வணிகத்தையும், இளைஞர்களின் வேலை வாய்ப்பு ஆகியவற்றை அழித்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரி, குறைந்த விகிதம் கொண்ட ஒரே வரியாக அமல் படுத்துவோம். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக அனைத்து அதிகராத்தையும் பயன்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.