Published on 28/08/2018 | Edited on 28/08/2018
கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து, பெரு வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரால் கேரளாவுக்கு சுமார் 19,000கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளது. 7லட்சம் பேர் தங்களின் வீட்டை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு கேரளா திரும்பி வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட சேதங்களை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சென்று காண்பதாக கூறப்பட்டது. தற்போது கேரளாவில் விமானம் மூலம் சென்றடைந்துவிட்டார். வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களான செங்கண்ணூர், ஆலப்புழா, அங்கமாலி ஆகிய இடங்களை இன்றும் வயநாடு மாவட்டத்தை நாளையும் பார்வையிட உள்ளார், ராகுல்.
விமானநிலையம் வந்தடைந்த ராகுல் காந்தியை, சஷி தரூர் மற்றும் இன்னும்பிற கேரளா காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர்.