Skip to main content

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ காங்கிரஸ் கட்சிக்கு தாவல்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இணைந்து பஞ்சாப் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தேர்தலை சந்திக்க முடிவெடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டெல்லி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என்ற அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது. 

 

aap mla



இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் , சட்டமன்ற உறுப்பினரான திரு. நாஜர் சிங் மன்சாகியா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவரும் ,அம்மாநில முதல்வருமான கேப்டன் அமீர்ந்தர் சிங் முன்னிலையில் இணைந்துள்ளார். இதனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களிடைய கடும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்சி தாவிய எம்எல்ஏ மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயும் என்பதும் , இதனால் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிப்போகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்