Skip to main content

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா... பந்தகால் நடப்பட்டது...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

PUDUCHERRY, THIRUNALLAR SANEESWARAN TEMPLE FESTIVAL

 

 

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தகால் நடப்பட்டது. தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் நடந்த பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சியில் அம்மாநில அமைச்சர் கமலக்கண்ணன், கோயில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள்  உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

 

கரோனா அச்சறுத்தல் காரணமாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்ளை அனுமதிக்க வாய்ப்பு இல்லை என்று தகவல் கூறுகின்றன. அதேபோல், வீட்டிலிருந்தவாறு விழாவை பக்தர்கள் காணும் வகையில் யூடூப் மூலமும், இணையதளம் மூலமும் சிறப்பு நேரலை செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

வரும் டிசம்பர் மாதம் 27- ஆம் தேதி காலை 05.22 மணிக்கு தனுஷ் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார் சனிபகவான்.

 

தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னதிகொண்டுள்ள சனீஸ்வரர் கோயிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை தான் சனிபெயர்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்