புதுச்சேரி: போலீஸ் தடுப்புகளை மீறி கவர்னர் மாளிகை முற்றுகை
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு புதுச்சேரியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக கவர்னர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கவர்னர் மாளிகைக்கு செல்லும் சாலைகள் அனைத்தையும் போலீசார் தடை செய்தனர். இருப்பினும் பேரணியாக வந்த மாணவர்கள் தடுப்புக்களை மீறி கவர்னர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரியில் பதட்டம் நிலவியது.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், இறந்த அனிதா குடும்பத்திற்கு அதிகப்படியான இழப்பீடு வழங்க கோரியும், முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேபோல் மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-சுந்தரபாண்டியன்