Published on 27/07/2022 | Edited on 27/07/2022

புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்க உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை அலுவல் குழு இறுதி செய்யும் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். முழுமையான பட்ஜெட்டை நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் என்பதால் கூட்டத்தொடர் நீண்ட நாட்கள் நடைபெறும்" என்று தெரிவித்தார்.