புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான மதுபான கூடங்கள், கடைகள் காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலங்கள் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இயங்கலாம். கடற்கரை சாலை, பூங்காக்கள், தோட்டங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைபயணம் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளில் அதிகபட்சமாக 100 பேர் வரை கலந்துக் கொள்ளலாம். திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் பார்வையாளர் அனுமதிக்கலாம். திரையரங்குகள் இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 09.00 மணிக்கு பிறகு இரவு காட்சிகள் ரத்து செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.