Skip to main content

காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

puducherry congress party leader and state minister namasivayam suspended


காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

 

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம், தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், நமச்சிவாயம் தனது எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதுச்சேரிக்கு வரும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்