சிறார்களைக் கடத்துவதாக கூறி 4 சாமியார்களைப் பொதுமக்கள் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வந்த அந்த சாமியார்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்த கோவிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்து பிற பகுதிக்குச் சாமியார்கள் செல்ல ஆயத்தமானபோது, கிராமத்திலிருந்த சிறார்களை தங்களுக்கு சேவை புரிய அனுப்புமாறு கிராமத்தினரிடம் சாமியார்கள் கேட்டுள்ளனர். இதனால் ஆவேசமுற்ற கிராமத்தினர் அந்த சாமியார்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
சிறார்களை கடத்த நினைப்பதாக நினைத்து சாமியார்களை அவர்களின் வாகனத்திலிருந்து சாலையில் இழுத்துப்போட்டு பெல்ட் மற்றும் கம்புகளாலும் கட்டைகளாலும் அடித்ததில் காயமுற்ற சாமியார்கள் சாலைகளில் சிதறி ஓடினர். அப்படி இருந்தும் அவர்களை விரட்டி விரட்டி பொதுமக்கள் அடித்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.