Skip to main content

புதுச்சேரியில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்!

Published on 21/10/2020 | Edited on 22/10/2020
 Private buses to operate in Pondicherry from tomorrow


கரானா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

 

இந்நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ளூர் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேசமயம் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டன.

 

ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருவாய் குறைந்துள்ளதால் சாலை வரியை நீக்க வேண்டும் என்று தனியர் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் புதுச்சேரி அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக அச்சங்கத்தின் தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

 

"இரண்டு காலாண்டிற்கான சாலை வரியை தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று தனியார் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும்"  என கண்ணன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்