இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. மேலும், ஆக்சிஜன் விநியோகம், கரோனா தடுப்பூசிகள் விநியோகம், ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் உள்ளிட்டவையும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கரோனாவைத் தடுக்க தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG பவுடர் மருந்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று (17/05/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் டி-டியோக்ஸி டி- குளுகோஸை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தினர்.
2DG பவுடர் மருந்தை ஒருமுறை தண்ணீரில் கலந்து அருந்தினால் கரோனா மேலும் பரவாமல் தடுக்கும். உருமாற்றம் உடைந்த கரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படக் கூடியது 2DG பவுடர் மருந்து. மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரிஸ் ஆகியவை இணைந்து இந்த 2DG மருந்தை உருவாக்கியுள்ளது.