பாலியல் புகாரில் சாமியார் கைது
ராஜஸ்தானில் ஆசிரமம் நடத்தி வரும், பிரபல சாமியார், கவுசலேந்திர பலாஹாரி மஹராஜ், 58, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 21 வயது சட்டக் கல்லுாரி மாணவி புகார் அளித்தார். இதனையடுத்து, சாமியார் மஹாராஜ் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதாக கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது உடல்நிலை சீரானதாக டாக்டர் சான்று அளித்ததை தொடர்ந்து, போலீசார் நேற்று(செப்.,23) அவரை கைது செய்தனர்.