Published on 26/07/2021 | Edited on 26/07/2021
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நான்கு நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்குச் சென்றுள்ளார். நேற்று (25.07.2021) காஷ்மீர் சென்ற அவர், இன்று கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. இந்தநிலையில், இந்தப் பயணத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மோசமான வானிலை நிலவுவதால் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்திற்குப் பதிலாக, பாரமுலாவில் உள்ள போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்துவார் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு நாளை நடைபெறும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.