நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் உச்சகட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக அளவு வன்முறைகள் நடைபெற்றன.
WATCH: Surveillance footage captured Indian police smashing security cameras in a mainly Muslim neighborhood of Meerut in northern India the day five Muslim men were shot dead as protests flared over a controversial citizenship law https://t.co/qJX12ifpFf pic.twitter.com/CR5wYou90p
— Reuters India (@ReutersIndia) December 27, 2019
இந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் அத்துமீறினார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகம் எழுந்த நிலையில், இன்று அதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் காவல்துறையினர் சாலைகளில் உள்ள கடைகளில் இருக்கும் கேமராக்களை உடைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. காவல்துறையினரின் அத்துமீறல்களை வேறுயாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக எதிர்கட்சியினர் கூறியுள்ளனர்.