Published on 16/11/2020 | Edited on 16/11/2020
ஒற்றுமையின் சிலையைத் தொடர்ந்து அமைதியின் சிலையை பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் திறந்த வைத்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் சர்தார் சரோவர் அணைப்பகுதியில் நிறுவப்பட்ட ஒற்றுமையின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைதியின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். ஜைன மதத்துறவியான ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜின் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ‘அமைதியின் சிலை’ என்ற பெயரில் அவரின் சிலையை பிரதமர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். 151 அங்குலம் (12.5 அடி) உயரமுள்ள இந்த சிலை, 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஜைன மதத்துறவிகள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.