மகாத்மா காந்தியின் 150- வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையினருடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில் பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான். சோனம் கபூர், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டார்.
அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அளப்பறிய படைப்பாற்றல் சக்தியை நாட்டின் நலனுக்காக பயன்படுத்துவது அவசியம் என்று கூறினார். மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்பும் விவகாரத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் தண்டியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அமீர்கான், மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்புவதற்கு பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளுக்காக பாராட்டுவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய நடிகர் ஷாருக்கான், இந்தியாவுக்கும், உலகுக்கும் காந்தியை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என எண்ணுவதாக தெரிவித்தார். பின்னர் அமீன்கான், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
#WATCH pic.twitter.com/GdA8VKWV9c
— ANI (@ANI) October 19, 2019