Skip to main content

கேரளாவில் இடுக்கி அணை திறப்பு...

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
idukki dam


கடந்த ஆக்ஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த கனமழையால் 25 ஆண்டுகள் கழித்து இடுக்கி அணை திறக்கப்பட்டது. இதனை அடுத்து கேரளாவே வெள்ளக்காடாக மாறியது. கேரளாவில் தற்போது மீண்டும் பலத்த கனமழை பெய்து வருகிறது இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் ஒரு ஷட்டர் திறந்து, விநாடிக்கு 50,000 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கேரள அரசு. இதுமட்டும் இன்றி கேரளாவில் 11 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி பலத்த கனமழை கேரளாவில் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்; சுற்றுலா சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

google map wrong direction young man incident idukki district 

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் போர்டு கொச்சியைச் சேர்ந்த எட்டு நண்பர்கள் குழுவாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள மலையிஞ்சி வனப்பகுதியில்  உள்ள கிழார் குன்று என்ற அருவியில் குளிக்க முடிவெடுத்து சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி மலையிஞ்சி வனப்பகுதி வரை கார் செல்லும் என்பதால் அங்கிருந்து வனப்பகுதிக்கு கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கூகுள் மேப் காட்டிய தவறான தகவலால் எதிர் திசையில் சுமார் 4 கி.மீ தூரம் அடர்ந்த வனத்தினுள் சென்றவர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் சிக்கி அங்கிருந்து மீண்டும் தங்கள் வந்த வழிக்கு திரும்ப இயலாமல் தவித்தனர்.

 

இந்நிலையில் நண்பர்கள் குழுவில் இருந்த ஜீஜூ ஜேம்ஸ் (வயது 35) என்பவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பாறையில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. இந்நிலையில் திருவனந்தபுரம் காவல்துறையினருக்கு அவருடன் சுற்றுலா வந்தவர்கள் தகவல் அளித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை உதவியுடன் காயமடைந்த ஜீஜூ ஜேம்ஸை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சுற்றுலா சென்றவருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

ஆற்றின் குறுக்கே மலைகளுக்கு நடுவே அமைந்த இடுக்கி அணை; நான்காவது முறையாகத் திறக்கப்பட்டது

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

Let's see about Idukki Dam!

 

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நிரம்பிய இடுக்கி அணையிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

 

கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் ஒன்று மலையும், மலை சார்ந்த இடமுமான இடுக்கி மாவட்டம். இங்குப் பெரியாற்றின் குறுக்கே இரு மலைகளுக்கு இடையே அமைக்கப்பட்டது தான் இடுக்கி அணை. இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 2,403 அடி நீர்மட்டம் கொண்டது. நாட்டின் மிகப்பெரிய ஆர்ச் வடிவ அணையும் இது தான். 1969- ஆம் ஆண்டு கட்ட தொடங்கி, 1973- ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. வழக்கமாகப் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்காக அணைகள் கட்டப்படும். ஆனால், பெரியாற்றில் பெருக்கெடுக்கும் நீரைத் தேக்கி நீர் மின்நிலையங்கள் மூலம் மின் தட்டுப்பாட்டைப் போக்கக் கட்டப்பட்டது தான் இடுக்கி அணை.

 

75 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை, கேரள மாநில மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணையின் பின்புறத்தில் உள்ள செறு தோணி அணையின் மூலம் வெளியேற்றப்படும்  நீரால், செறு தோணி, குளமாவு, மூலமௌற்றம் ஆகிய மூன்று நீர்மின் நிலையங்களில் அதிகபட்சமாக 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 

 

இத்தனை பிரம்மாண்ட அணை கட்டப்பட்டு 48 ஆண்டுகள் ஆனாலும் 1981, 1992, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டுமே நீர் நிறைந்து திறக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக தற்போது இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.  மூன்று மதகுகள் மூலம் ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது எர்ணாகுளம் மாவட்டம் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.