Skip to main content

பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுமா? நிதி ஆயோக் துணைத்தலைவர் அதிரடி!

Published on 01/06/2019 | Edited on 01/06/2019


2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக  வெற்றி பெற்று  இரண்டாவது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. இந்நிலையில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “புதிய அரசின் 100 நாட்கள் பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ், வரும் மாதங்களில் 42 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் அல்லது மூடப்படும் என சூசகமாக தெரிவித்தார். ஏனெனில் சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் மத்திய அரசு, இத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார திட்டமிடும் நிறுவனமான திட்டக் கமிஷனை, 2014- ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி திட்டக்கமிஷனை கலைத்து 'நிதி ஆயோக்' குழுவை உருவாக்கினார்.

 

 

UNEMPLOYEES

 

 

அதனைத் தொடர்ந்து பேசிய ராஜீவ் குமார், தொழிலாளர்கள் சட்டங்களிலும் மாற்றம் செய்ய உள்ளதாகவும், புதிய தொழில் வளர்ச்சிக்கான இடங்கள் உருவாக்கப்படும். இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்கினால் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும். ஆனால் அதற்கு வங்கிகளில் உள்ள வாரா கடனே பிரச்சினையாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். இந்த மாதம் நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய இளைஞர்களுக்கு அதிக திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடவுள்ளார். அதே போல் இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒரே சலுகைகள், ஊதியங்கள் பெறும் வகையில் பல அதிரடி மாற்றங்களை பிரதமர் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்