சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், என்எல்சி நிறுவனம் சார்பில் கட்டப்படவுள்ள 280 நவீன கழிப்பறை திட்டத்துக்கும், கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேம்பால திட்டத்துக்கு மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் அவர் பேசியபோது, தண்டவாளங்களில் மக்கள் கடந்து செல்லும்போது ஏற்படும் விபத்துகளை தடுக்க ரயில்வே தொடர்ந்து திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஆள் இல்லா ரயில்வே கேட் இல்லாத நிலையை உருவாகியுள்ளது. இதற்காகச் சுரங்கப்பாதைகள், மற்றும் மேம்பாலங்கள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் அதிவிரைவு ரயில் பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள என்.எல்.சி நிறுவனம் மின்உற்பத்தி அதிகமாகியிருக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தில் கடந்த 2004-2014-ம் ஆண்டு வரையில் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. அதே பாஜக ஆட்சிக்கு வந்தபின் கடந்த 4 ஆண்டுகளில் மொத்த மின்உற்பத்தி திறன் 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.