Published on 24/08/2021 | Edited on 24/08/2021

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மக்களுக்குத் தடுப்பூசியை செலுத்தும் பணிகளை வேகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றன.
இந்தநிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள, மக்கள் தங்கள் பெயரை எளிதாகப் பதிவுசெய்யும் வகையில் புதிய நடைமுறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்தமுறையில் மக்கள், வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசிக்காக தங்களது பெயரை பதிவுசெய்துகொள்ளலாம்.
கரோனா தடுப்பூசிக்காக தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ள விரும்பும் மக்கள், 919013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Book Slot’ என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதையடுத்து உங்கள் தொலைபேசி எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி வரும். அதன்மூலம் தடுப்பூசிக்காக தங்களது பெயரை பதிவுசெய்துகொள்ளலாம்.