விவசாயநிலத்தில் 15-ந்திற்கும் மேற்பட்ட மயில்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக இறந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே நாகர்கர்னூல் மாவட்டம் கக்கல்லபள்ளி என்ற கிராமத்தில் விவசாய நிலத்தில் 15-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன இதுபற்றி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மயில்கள் இறந்து கிடந்த வயல் பகுதிக்கு வந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் இறந்தது கிடந்த 15-க்கும் மேற்பட்ட மயில்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். தொற்று பாதிப்பால் இப்படி கூட்டமாக மயில்கள் இறந்ததா அல்லது விவசாய நிலத்தில் பயிகர்ளை பாதுகாக்க ஏதெனும் மருந்து வைக்கப்பட்டு அதை உட்கொண்டு இறந்ததா என விசாரித்தும், ஆய்வுசெய்தும் வருகின்றனர்.
இதுபோல் அந்த கிராமத்தில் வேறுபகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த வாரம் இதுபோன்று 10 மயில்கள் கூட்டமாக இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.