ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் என்றாலும், மாநில பட்ஜெட் என்றாலும் நிதி துறை அமைச்சர் பெட்டியுடன் சென்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கம். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முறையாக பட்ஜெட் பெட்டியை தவிர்த்து "சிறிய உறையை" கையில் எடுத்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதலை பெறுவதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்திக்க புறப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இன்று காலை 11.00 மணியளவில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் தற்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு முன்னதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.