Skip to main content

மாநிலங்களவைத் தலைவரின் பாதுகாவலர் சீருடை மாற்றம்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (18/11/2019) தொடங்கி, டிசம்பர் மாதம் 13- ஆம் தேதி வரை 20 நாட்கள் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 2- ஆவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தொடர் இதுவாகும். 
(காவலர்களின் புதிய சீருடை)

PARLIAMENT RAJAYSABHA SPEAKER SECURITY POLICE UNIFORM CHANGED

                                                                                

மாநிலங்களவையில் அவைத்தலைவருக்கு பாதுகாப்பு தரும் காவலர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. முன்பு பாதுகாப்பு காவலர்களின் உடை வெள்ளை நிறத்திலும், தலைப்பாகை என இருந்த நிலையில், தற்போது ராணுவ அதிகாரிகள் போல் சீருடை மாற்றப்பட்டுள்ளது. 
(காவலர்களின் பழைய சீருடை)

PARLIAMENT RAJAYSABHA SPEAKER SECURITY POLICE UNIFORM CHANGED


மாநிலங்களவையின் 250- வது கூட்டத்தொடரையோட்டி நடைபெற்று வரும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு குறித்து பேசி வருகிறார். அதில் "சிறந்த தலைவர்கள் பலர் மாநிலங்களவையில் உரையாற்றி இருக்கின்றனர்.

PARLIAMENT RAJAYSABHA SPEAKER SECURITY POLICE UNIFORM CHANGED


தேர்தல் அரசியலில் இருந்து விலகி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புவோருக்கு இந்த அவை வாய்ப்பளிக்கிறது. பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டத்தில் பேசுவது பெருமை அளிக்கிறது" என்றார். 




 

சார்ந்த செய்திகள்