Skip to main content

மத்திய அரசு மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகிரங்க குற்றச்சாட்டு... பாஜக -வில் பரபரப்பு...

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

இந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்தித்துள்ள நிலையில், இதற்கான முக்கிய காரணம் மத்திய அரசு தான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

parakala prabhakar views on indian economy

 

 

பொருளாதார நிபுணரும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பிரபாகர் அண்மையில் 'தி இந்து' பத்திரிகையில் இந்திய பொருளாதாரம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதினார்.  அதில், இன்றைய இந்திய பொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம். இனியாவது முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் பொருளாதார கொள்கையை பாஜக அரசு பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தற்போதைய பொருளாதார நிலையை மாற்ற முடியும் என தெரிவித்தார். மத்திய நிதியமைச்சரின் கணவரே மத்திய அரசையும், இந்திய பொருளாதாரத்தையும் பகிரங்கமாக விமர்சித்துள்ளது அக்கட்சியிலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்