இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பரவலை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளனர். நேற்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடியும், ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில், டேங்கரில் இருந்து ஆக்சிஜன் நிரப்பும்போது, ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். ஆக்சிஜன் வாயு கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களை கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டேங்கர் வால்வில் ஏற்பட்ட பழுதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மஹாராஷ்ட்ரா அரசு, இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது எனவும் மஹாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது.