Skip to main content

டார்ச் வெளிச்சத்தில் நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சை! - வைரல் வீடியோ

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

பெண் ஒருவருக்கு டார்ச் வெளிச்சத்தில் அறுவைச் சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Bihar

பீகார் மாநிலம் சாகர்ஸா பகுதியில் உள்ளது சாதர் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், வெறும் டார்ச் வெளிச்சத்தில் வைத்தே அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையானது நடத்தப்பட்டுள்ளது.

 

 

மேலும், அறுவைச் சிகிச்சை செய்யும் நபர் மருத்துவர் உடையில் இல்லாமல், காக்கி உடையில் இருப்பதும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் செல்போன் வெளிச்சத்தில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சென்ற ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 32 நோயாளிகளுக்கு டார்ச் வெளிச்சத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்