Published on 27/10/2018 | Edited on 27/10/2018
மிசோரம் மநில சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில் மிசோரம் தேசிய முன்னணி கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அப்போது அந்தக் கூட்டணிக்கு ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிசோரம் தேசிய முன்னணி அறிவித்துள்ளது. மேலும் இந்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளது. அதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா சமிபத்தில் மிசோரம் வந்திருந்தப்போது பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.