Skip to main content

"அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்"... நிர்பயாவின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு...

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

nirbhayas mother statement about convicts execution

 

 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நிர்பயாவின் தாயார், "இதுவரை நான் எப்போதுமே அரசியல் பற்றி பேசியதில்லை. ஆனால், தற்போது அது பற்றி பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனது மகள் மரணம் அடைந்த போது யாரெல்லாம் போராடினார்களோ, அவர்களே தற்போது எனது மகளின் இறப்பின் மூலம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். நிர்பயாவின் மரணத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள்" என தெரிவித்துள்ளார். டெல்லியில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதன் பின்னணியில் அரசியல் ஆதாயம் உள்ளது என அரசியல் நோக்கர்கள் பலரும் தெரிவித்து வரும் நிலையில், நிர்பயாவின் தாயாரும் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்