Skip to main content

கரோனா பூஸ்டர் தடுப்பூசி: இன்று முடிவெடுக்கும் நிபுணர்கள் குழு?

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

booster

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸிடமிருந்து மக்களைப் பாதுகாக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசின் நிபுணர்கள் பூஸ்டர் ஷாட்கள் தேவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துவந்தனர்.

 

இந்தநிலையில், இந்தியாவில் கரோனா வைரஸை மரபணு வரிசைமுறை சோதனை செய்யும் ஆய்வகங்களின் கூட்டமைப்பான 'ஐஎன்எஸ்ஏசிஓஜி', "தற்போதைய தடுப்பூசிகளில் உள்ள குறைவான ஆன்டிபாடிகள், ஒமிக்ரான் கரோனாவை அழிப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்பதால் பூஸ்டர் ஷாட்கள் செலுத்துவது குறித்து ஆலோசிக்கலாம்" என பரிந்துரைத்தது.

 

அண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா, பூஸ்டர் ஷாட்கள் குறித்தும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் நிபுணர்கள் முடிவெடுப்பார்கள் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் இன்று (06.12.2021) நடைபெறவுள்ளதாகவும், இதில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது மற்றும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்