Published on 22/04/2019 | Edited on 22/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
![congress candidates for delhi announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/phuo14mTEbk1C-zajSkdEvLTF20xjIZNcgTnA8wQsgA/1555911445/sites/default/files/inline-images/delhi-list-std.jpg)
இந்நிலையில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் டெல்லியின் முன்னாள் முதல்வரான ஷீலா தீக்ஷித் வட கிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார். ஆம் ஆத்மீ கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.